SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜப்பானில் உள்ள தீவில் வெறிச்சோடிய கிராமத்தை பொம்மைகளால் உயிரூட்டிய பெண்: குவியும் சுற்றுலா பயணிகள்

498
23/10/2018

ஷிகொக்கு : ஜப்பான் நாட்டில் உள்ள ஷிகொக்கு தீவில் நகோரோ என்ற கிராமம் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன் அந்த கிராமத்தை விட்டு சென்ற அயனோ சுகிமி என்ற 67 வயது பெண்மணிக்கு தனது கிராமத்தை பார்க்க வேண்டும் என்ற ஆசை எழுந்தது. இதையடுத்து தனது கிராமத்துக்கு சென்ற சுகிமி, கிராமம் வெறிச்சோடி கிடந்ததை கண்டு வேதனையடைந்தார். ஆள் அரவம் இல்லாத தன் கிராமத்தை பார்க்க சுகிமிக்கு பிடிக்கவே இல்லை. அதனால் ஒரு முடிவுக்கு வந்தார். கிராமத்தில் பார்த்த மனித உருவங்களை மனதில் வைத்துக் கொண்டே நிறைய பொம்மைகளை தயார் செய்ய தொடங்கினார். அவற்றுக்கு வண்ணம் தீட்டி, ஆடைகள் அணிவித்து, பஸ் நிலையம், சந்தை, பள்ளிக்கூடம், சாலை ஓரங்கள் எங்கும் அந்தப் பொம்மைகளை வைத்தார். இதுவரை 350 பொம்மைகளைத் தயார்செய்துள்ளார். மக்கள் நடமாட்டமே இல்லாத அந்தக் கிராமத்தில், பொம்மைகளை மக்களாக நினைத்துக்கொண்டிருக்கும் சுகிமி, தற்போது சந்தோஷத்தில் இருக்கிறார். ஏனென்றால், சுகிமி தயாரித்துள்ள பொம்மைகளைக் காணச் சுற்றுலாப் பயணிகள் அந்தக் கிராமத்துக்கு வந்து குவிகின்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-01-2019

    20-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 19-01-2019

    19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • ChillaiKalanKashmir

    கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

  • bombblastcolombia

    கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • chinafiredrone

    மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்