SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மெக்சிகோவை மிரட்டவிருக்கும் வில்லா புயல்: முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

287
23/10/2018

மெக்ஸிக்கோ: மெக்ஸிக்கோவில் பசிபிக் கடற்கரையை நோக்கி வில்லா எனும் சக்திவாய்ந்த சூறாவளி 155 மைல் வேகத்தில் பலத்த காற்றுடன் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூறாவளியானது இன்று அல்லது நாளை கரையை கடக்கும் என தேசிய சூறாவளி மையம் தெரிவித்துள்ளது. புயல், காற்று மற்றும் மழைப்பொழிவு ஆகியவற்றால் தென்மேற்கு மற்றும் மேற்கு-மத்திய மெக்ஸிக்கோ பகுதிகளில் பாதிப்பு அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சூறாவளியால் ஆபத்தில் உள்ள பகுதிகளில் உள்ள மீன்பிடி கிராமங்கள், ரிசார்ட் ஹோட்டல் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் இருந்து மக்களை பாதுகாப்பான இடத்திற்கு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், முன்னேற்பாடு பாதுகாப்பு பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-11-2018

    18-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 17-11-2018

    17-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 3rdthiruvanamalai

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவம்: பூத வாகனத்தில் சந்திரசேகரர் பவனி

  • pudukottaikaja

    கஜா புயல் எதிரொலி : புதுக்கோட்டையில் பலத்த காற்று மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படங்கள்

  • NagaiGajaStorm

    நாகை மாவட்டத்தை கதிகலங்கவைத்த கஜா புயலின் ருத்ரதாண்டவம்: உருக்குலைந்து கிடக்கும் நகரம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்