SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலகில் எங்கும் இல்லாத தனிச்சிறப்புடன் கட்டி முடிக்கப்பட்ட உலகின் நீளமான கடல் பாலம்

2427
22/10/2018

ஹாங்காங்: சீனாவையும் ஹாங்காங்கையும் இணைக்கும் உலகின் ஆக நீளமான கடல் பாலம் இம்மாதம் 24ஆம் தேதி போக்குவரத்துக்காக திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. சீனா-ஹாங்காங் இடையே போக்குவரத்தை எளிமைப்படுத்தும் விதமாக ஹாங்காங் ஸுகாய் மக்காவ் பாலம் திறக்கப்படவிருக்கிறது. 55 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இது உலகின் நீளமான பாலமாகக் கருதப்படுகிறது. இதன் மூலம் ஹாங்காங் ஸுகாய் இடையேயான பயண நேரம் 3 மணி நேரத்திலிருந்து வெறும் 30 நிமிடங்களாகக் குறைகிறது. அத்துடன், ஹாங்காங் அனைத்துலக விமான நிலையத்திற்குச் செல்ல நேரடி வசதியையும் இந்தக் கடற்பாலம் வழங்கும். உலகின் அதி நீளமான கடல் பாலத்தின் மீது மின்சார வாகனங்களின் பேட்டரிகளை சார்ஜ் செய்து கொள்ளும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்திய மதிப்பில் ரூ.1060 கோடி செலவில் கட்டப்பட்டு வந்த இந்த பாலத்தின் கட்டமைப்பு பணிகள் முடிவுக்கு வந்தது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • womesrally

    வுமென்ஸ் மார்ச் 2019: உலகின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் ஒன்று திரண்டு பேரணி

  • turkeycamelfight

    2,000 ஆண்டுகளாக நடந்து வரும் பாரம்பரிய ஒட்டகச் சண்டை: துருக்கியில் கோலாகலத்துடன் ஆரம்பம்

  • mexicoblast

    மெக்ஸிகோவில் எண்ணெய் குழாய் தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 79 ஆக உயர்வு!

  • 21-01-2019

    21-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 20-01-2019

    20-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்