SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

412
19/10/2018

திருமலை: திருப்பதியில் 9 நாட்களாக நடந்த நவராத்திரி பிரம்மோற்சவம் நேற்று சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவடைந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் புஷ்கரணியில் புனித நீராடினர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் பெரிய சேஷம், சின்ன சேஷம், அன்னம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் நான்கு மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிலையில் பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளான நேற்று சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்தது. சக்கரத்தாழ்வாருக்கு பால், தயிர், தேன், இளநீர் உள்ளிட்ட சுகந்த திரவியங்களை கொண்டு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து ஏழுமலையான் கோயில் தெப்பக்குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்தது. சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரிக்கு பின் புனித நீராடினால் சகல பாவங்களும், தோஷங்களும் விலகி கஷ்டங்கள் தீரும் என்பது ஐதீகம் என்பதால், குளத்தை சுற்றியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-11-2018

    18-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 17-11-2018

    17-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 3rdthiruvanamalai

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவம்: பூத வாகனத்தில் சந்திரசேகரர் பவனி

  • pudukottaikaja

    கஜா புயல் எதிரொலி : புதுக்கோட்டையில் பலத்த காற்று மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படங்கள்

  • NagaiGajaStorm

    நாகை மாவட்டத்தை கதிகலங்கவைத்த கஜா புயலின் ருத்ரதாண்டவம்: உருக்குலைந்து கிடக்கும் நகரம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்