SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருப்பதி பிரம்மோற்சவ 3ம் நாள் : சிம்ம வாகனத்தில் மலையப்ப சுவாமி உலா

551
12/10/2018

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் 3ம் நாளான இன்று காலை சிம்ம வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா வந்தார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் நேற்று முன்தினம் தொடங்கியது. இதையடுத்து 3வது நாள் உற்சவம் இன்று காலை நடந்தது. இதில் சிம்ம வாகனத்தில் மலையப்ப சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி நான்கு மாடவீதியில் பவனி வந்தார். அப்போது மாட வீதிகளில் திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்று முழக்கமிட்டு தரிசனம் செய்தனர். மேலும் மாட வீதியில் சுவாமி ஊர்வலத்தில் ஏராளமான கலைஞர்கள் மேளதாளத்துடன் சுவாமி வேடங்களில் நடனமாடி வந்தனர். இதைத்தொடர்ந்து இன்றிரவு முத்துப்பந்தல் வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் மலையப்ப சுவாமி வலம் வருகிறார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • modi1

    ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உடன் சந்திப்பு

  • dr

    மியான்மரில் போதைப்பொருள் தடுப்பு தினத்தை முன்னிட்டு 747 கோடி மதிப்பிலான போதை பொருள்கள் தீ வைத்து அழிப்பு

  • hongkong

    சீனாவுக்கு நாடுகடத்தி விசாரிக்கும் மசோதாவை எதிர்த்து ஹாங்காங்கில் 1000க்கும் மேற்பட்டோர் போராட்டம்

  • jappan

    ஜப்பானில் நெற்பயிரில் உள்ள பூச்சிகளை அழிப்பதற்காக புதிய ரோபோ கண்டுபிடிப்பு

  • fire

    அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் வனப்பகுதியில் மூன்று நாட்களாக காட்டுத் தீ

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்