SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருப்பதி நவராத்திரி பிரமோற்சவம் : அன்ன வாகனத்தில் மலையப்ப சுவாமி பவனி

478
12/10/2018

திருமலை: திருப்பதி கோயில் நவராத்திரி பிரமோற்சவத்தின் 2வது நாளான நேற்று இரவு அன்ன வாகனத்தில் மலையப்ப சுவாமி பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று சிம்ம வாகனத்தில் வீதி உலா வருகிறார். 2வது நாளான நேற்று காலை 5 தலைகளுடன் கூடிய சின்ன சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி கிருஷ்ணர் அலங்காரத்தில் எழுந்தருளி யானை, குதிரை, காளை மாடு அணிவகுத்து செல்ல, மேளதாளம் முழங்க நான்குமாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்று பக்தி முழக்கமிட்டும் கற்பூர ஆரத்தி எடுத்தும் சுவாமி தரிசனம் செய்தனர். வீதி உலாவில், பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த பக்தர்கள் சுவாமி வேடமணிந்தும், கோலாட்டம் ஆடியபடியும், பஜனை பாடல்கள் பாடியும் வந்தனர். தொடர்ந்து, இரவு அன்ன வாகனத்தில் சரஸ்வதி தேவி அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளினார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-06-2019

    16-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-06-2019

    15-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • china

    சீனாவில் பாலம் சரிந்ததால் 2 வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியது: மூழ்கியவர்களை தேடும் பணி தீவிரம்

  • oaman_thee11

    மர்ம தாக்குதல்களால் ஓமன் வளைகுடா பகுதியில் தீப்பற்றி எரியும் எண்ணெய் கப்பல்கள்

  • AftermathProtestHK

    ஹாங்காங்கில் அரங்கேறும் தொடர் போராட்டங்களால் அலங்கோலமாகும் நகரும்..: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்