SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருப்பதி நவராத்திரி பிரமோற்சவம் : தங்க திருச்சி வாகனம், பெரிய சேஷ வாகனம் மலையப்ப சுவாமி வீதி உலா

474
11/10/2018

திருமலை: திருப்பதி கோயிலில் நவராத்திரி பிரமோற்சவத்தையொட்டி தங்க திருச்சி வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த மாதம் வருடாந்திர பிரமோற்சவம் நடந்த நிலையில், தொடர்ந்து இந்தாண்டின் இரண்டாவது பிரமோற்சவமாக நவராத்திரி பிரமோற்சவம் நேற்று தொடங்கியது. இதையொட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி ரங்கநாதர் மண்டபத்தில் கொலு வைக்கப்பட்டு தலைமை செயல் அலுவலர் அனில்குமார் சிங்காலுக்கு ஆகம ஆலோசகர் சுந்தரவதன பட்டாச்சாரியா சிறப்பு பூஜைகள் செய்து பிரமோற்சவத்திற்கான கங்கண கயிறு கட்டினார். தொடர்ந்து இரவு அலங்கரிக்கப்பட்ட பெரிய சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் மலையப்ப சுவாமி நான்குமாட வீதியில் பவனி வந்தார். அப்போது பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து சுவாமி தரிசனம் செய்தனர். வீதி உலாவில் பக்தர்கள் கோலாட்டம் ஆடியபடியும், பல்வேறு வேடங்கள் அணிந்தும் பங்கேற்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • christree_world

    உலகம் முழுவதிலும் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ள கண்ணைக்கவரும் கிறிஸ்துமஸ் மரங்களின் புகைப்படங்கள்!

  • army_girlschn

    சென்னை ராணுவப் பயிற்சி மையத்தில் ஆப்கானிஸ்தான் பெண் ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி!

  • loyola_studnt

    சர்வதேச குடியேறுபவர்களின் நாளை முன்னிட்டு சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் பேரணி

  • military_airballon

    ராட்சத பலூனில் ராணுவ வீரர்கள் சாகசப் பயணம்: காஞ்சிபுரத்தில் கண்டுகளித்த பொதுமக்கள்!

  • pongal_potpaint

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பானைகளுக்கு வண்ணம் தீட்டும் பணிகள் தீவிரம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்