SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையம் : பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்

484
24/09/2018

கேங்டாக்: சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். தலைநகர் காங்டாக்கில் இருந்து 30கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாக்யாங் நகரில் 201 ஏக்கர் பரப்பளவில் விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. பொறியியல் வல்லுனர்களுக்கு பெரும் சவாலானதாக கருதப்பட்ட இந்தப் பணியானது மிகப் பிரமாதமாக முடிந்துள்ளது. சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையம் இதுதான். பாக்யாங் விமான நிலையத்தில் 1.75 கிலோமீட்டர் தொலைவிலான ரன்வே அமைக்கப்பட்டுள்ளது. டாக்ஸிவே 116 மீட்டர் நீளம் கொண்டது. அக்டோபர் 4ம் தேதி முதல், இந்த விமான நிலையத்தில் வர்த்தக ரீதியிலான போக்குவரத்து தொடங்க உள்ளது. முதல் கட்டமாக கொல்கத்தா, டெல்லி, குவஹாத்தி நகரங்களுக்கு தினசரி விமானங்கள் இயக்கப்படும்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • CanadaSyrianChildren

    கனடாவில் உள்ள வீட்டில் பயங்கர தீவிபத்து: ஒரே குடும்பத்தை சேர்நத 7 குழந்தைகள் பலி

  • DroneLanternChina

    ட்ரோன்களைப் பறக்கவிட்டு வித்தியாசமான லாந்தர்ன் விளக்குத் திருவிழா: சீனாவில் நடைபெற்றது

  • AttukalPongalaKerala

    ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் விழா கொண்டாட்டம்: லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்பு

  • mahipoornima

    கும்பமேளாவில் மகி பூர்ணிமா கோலாகலம் : கங்கைக்கு திரண்டு வந்து புனித நீராடிய பக்தர்கள்

  • AeroShowBangalore19

    பெங்களூருவில் ஆசியாவின் மிகப்பெரிய ஏர் ஷோ: ரஃபேல் உள்ளிட்ட கண்கவர் விமானங்கள் சாகசம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்