SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிலியில் சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற காவல்துறை நாய்க்குட்டிகள் !

555
24/09/2018

சிலியில் சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் காவல்துறை நாய்க்குட்டிகள் பங்கேற்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வரவேற்பு பெற்றுள்ளன. 208 வது சுதந்திர தின ராணுவ அணிவகுப்பில் காவல்துறையினரும் பங்கேற்றனர். காவல்துறையில் ஓர் அங்கமாய் வகிக்கும் மோப்ப நாய்களையும் கவுரவிக்கும் விதமாக அவற்றையும் அணிவகுப்பில் பங்கேற்கச் செய்தனர். கோல்டன் ரிட்ரீவர், லேப்ரடார் உள்ளிட்ட வகையைச் சேர்ந்த நாய்களின் அணிவகுப்பில் மோப்ப நாய் பயிற்சி வழங்கும் பெண்கள் நாய்க்குட்டிகளை குழந்தையைப் போல் தூக்கிக் கொண்டு அணிவகுப்பில் பங்கேற்றனர். அவற்றில் சில தூங்கியபடியே அணிவகுப்பில் பங்கேற்றன. வளர்ந்ததும் காவல் சேவையில் அவை ஈடுபடவுள்ளன. அணிவகுப்பில் பெரிய நாய்களுக்கு அவற்றின் பாதங்களுக்கு ஏற்ப பிரத்யேக ஷூக்களும் அணிவிக்கப்பட்டிருந்தன.

Like Us on Facebook Dinkaran Daily News
  • bji

    முன்னாள் சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டாவை பாஜக செயல் தலைவராக அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு

  • suvami

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பிரம்மோற்சவ விழா 5ம் நாளான இன்று சுவாமி நாச்சியார் வீதி உலா

  • mango

    கிருஷ்ணகிரியில் 27வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி: மலர்கள் கொண்டு உலக கோப்பை வடிவமைப்பு

  • earth

    சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சக்தி வாழ்ந்த நிலநடுக்கம்: 12 பேர் உயிரிழப்பு,125 பேர் படுகாயம்

  • airshow

    பாரிசில் நடைபெற்ற 53 வது சர்வதேச விமான கண்காட்சி: போயிங் போன்ற பல்வேறு விமானங்கள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்