SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ திருவிழா : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

581
21/09/2018

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ திருவிழா சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு பெற்றது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கடந்த 13ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி தயார்களுடன் தினமும் பெரிய சேஷம், சின்ன சேஷம், அன்னம், கருடன் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் காலையும் மாலையும் நான்கு மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பிரம்மோற்சவத்தின் கடைசி நாளான இன்று காலை கோயிலில் இருந்து அதிகாலை உற்சவ மூர்த்திகளும் சக்கரத்தாழ்வாரும் ஊர்வலமாக வராஹ சுவாமி கோயிலுக்கு வந்தனர். வராக சுவாமி கோயில் எதிரே மலையப்ப சுவாமி தயார்களுக்கும் சக்கரத்தாழ்வாருக்கும் பால்,தயிர், தேன், இளநீர், உள்ளிட்ட சுகந்த திரவியங்களை கொண்டு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் ஏழுமலையான் கோயில் தெப்ப குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் தெப்பள் குளத்தை சுற்றியிருந்த ஆயிரகணக்காண பக்தர்கள் புனித நீராடினர். இன்று இரவு ஒன்பது நாட்கள் சுவாமிக்கு நடைபெற்ற வாகன சேவை காண வந்த தேவதைகளை வழி அனுப்பும் விதமாக ஆகம முறைப்படி வேத மந்திரங்கள் முழங்க கோயிலில் உள்ள தங்க கொடிமரத்தில் பிரம்மோற்சவத்திற்காக ஏற்றப்பட்ட கொடி இறக்கப்படுகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • christree_world

    உலகம் முழுவதிலும் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ள கண்ணைக்கவரும் கிறிஸ்துமஸ் மரங்களின் புகைப்படங்கள்!

  • army_girlschn

    சென்னை ராணுவப் பயிற்சி மையத்தில் ஆப்கானிஸ்தான் பெண் ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி!

  • loyola_studnt

    சர்வதேச குடியேறுபவர்களின் நாளை முன்னிட்டு சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் பேரணி

  • military_airballon

    ராட்சத பலூனில் ராணுவ வீரர்கள் சாகசப் பயணம்: காஞ்சிபுரத்தில் கண்டுகளித்த பொதுமக்கள்!

  • pongal_potpaint

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பானைகளுக்கு வண்ணம் தீட்டும் பணிகள் தீவிரம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்