SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருப்பதியில் 7வது நாள் பிரமோற்சவம் : சந்திர பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா

384
20/09/2018

திருமலை: திருப்பதி கோயில் பிரமோற்சவத்தின் 7வது நாள் இரவு அலங்கரிக்கப்பட்ட சந்திர பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிலையில், பிரமோற்சவத்தின் 7வது நாளான நேற்று காலை ஏழு குதிரைகளுடன் அலங்கரிக்கப்பட்ட தங்க சூரிய பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி பத்ரி நாராயணன் அலங்காரத்தில் எழுந்தருளி நான்குமாடவீதியில் உலா வந்து திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது பக்தர்கள் ‘கோவிந்தா, கோவிந்தா’ என்று பக்தி முழக்கத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து இரவு அலங்கரிக்கப்பட்ட சந்திர பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி வெண்ணை தின்னும் கிருஷ்ணர் அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வீதி உலாவில் ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கலைஞர்கள் கோலாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் ஆடியபடி பங்கேற்றனர். பிரமோற்சவத்தின் 8வது நாளான இன்று மகா தேரோட்டம் நடக்கிறது. பெரிய தேரில் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க நான்கு மாட வீதியில் உலா வர உள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-02-2019

    23-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennai_pkankatchui1

    சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!

  • israelmoonshuttle

    சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை

  • chennai_laksh1

    திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா

  • chinadance

    சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்