SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருப்பதியில் 5வது நாள் பிரமோற்சவம் கோலாகலம் : தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா

497
18/09/2018

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரமோற்சவத்தின் 5வது நாளான நேற்று தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவம் கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரமோற்சவத்தின் 5வது நாளான நேற்று காலை மோகினி அலங்காரத்தில் மாய மோகத்தை போக்கும் வகையில் மலையப்பர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும் மற்றொரு பல்லக்கில் நாச்சியாருடன் ஸ்ரீகிருஷ்ணரும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுவாமி வீதி உலாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் நான்கு மாடவீதியின் இருபுறமும் திரண்டு நின்று கோவிந்தா, கோவிந்தா’’ என்று விண்ணதிர பக்தி முழக்கத்துடன் சுவாமியை தரிசனம் செய்தனர். மேலும், வீதி உலாவில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கலைஞர்கள், மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை, கோலாட்டம், ஆடியபடி பங்கேற்றனர். பிரமோற்சவத்தின் முக்கிய சேவையான தங்க கருட சேவை நேற்று இரவு நடைபெற்றது. இதில் மலையப்ப சுவாமி தங்கம், வைரம், மரகதம் கற்கள் பதிக்கப்பட்ட ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு தங்க கருட வாகனத்தில் வீதி உலா வந்தார். அப்போது திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பயபக்தியுடன் தரிசனம் செய்தனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-02-2019

    17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 16-02-2019

    16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • BrightBrussels

    ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்

  • francelemon

    பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு

  • TitanicReplicaChina

    முழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்