SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருப்பதியில் 2வது நாள் பிரம்மோற்சவம் : சின்ன சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா

382
14/09/2018

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 2ம் நாளான இன்று காலை சின்னசேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதிஉலா வந்தார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கொடியுடன், ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி நான்கு மாட வீதியில் வலம் வந்தனர். மாலை 6.45 மணிக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடு தனது குடும்பத்தினருடன் பேடி ஆஞ்சநேய சுவாமி கோயிலில் இருந்து பட்டு வஸ்திரங்களை தலையில் சுமந்து வந்து ஏழுமலையானுக்கு சமர்ப்பித்தார். இதையடுத்து பிரம்மோற்சவத்தின் முதல்நாளான நேற்றிரவு ஏழுதலைகளுடன் கூடிய பெரிய சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் மலையப்ப சுவாமி வீதிஉலா வந்தார். 2ம்நாள் உற்சவம் இன்று காலை நடந்தது. 5 தலை நாகங்கள் கொண்ட சின்ன சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி மாட வீதிகளில் பவனி வந்தார். அப்போது நான்கு மாடவீதியின் இருபுறமும் திரண்டிருந்த பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என பக்தியுடன் தரிசனம் செய்தனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • thiruvan_5thdaycelb

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 5 ஆம் நாள்: விநாயகர், சந்தரசேகரர் மாட வீதியில் பவனி

  • rarephots_indiragandhi

    முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் அரிய புகைப்படங்கள்!

  • 2018_indiragandibirthdy

    இரும்பு பெண்மணி இந்திரா காந்தியின் 101 வது பிறந்த தினம்: தலைவர்கள் மரியாதை!

  • america_winterstorm2018

    வடகிழக்கு அமெரிக்க பகுதிகளில் தொடங்கியுள்ள முதல் பனிப்புயல்!

  • 2018wildfire_trumph

    கலிபோர்னியா காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட டிரம்ப்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்