SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வியட்நாமில் வெப்ப மண்டல புயல் தாக்கியதில் 32 பேர் உயிரிழப்பு ; 20 பேர் மாயம்

344
23/07/2018

வியட்நாமில் வெப்ப மண்டல புயல் தாக்கியதில் 32 பேர் உயிரிழந்தனர்.அந்நாட்டின் யென்பாய் மாகாணத்தின் வடக்கு கடலோரப் பகுதிகளை சன்டின் என்ற புயல் தாக்கியது. இதனைத் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்ததால் தலைநகர் ஹனோய் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. வெள்ள பாதிப்பால் 32 பேர் பலியானதாகவும், 20 பேர் மாயமானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.5 ஆயிரம் வீடுகள் சேதமடைந்தததுடன், 2 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்ட விளைநிலங்கள் நாசமாகின. 17 ஆயிரம் விலங்குகளும் உயிரிழந்திருப்பதாக மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ஆங்காங்கே வெள்ளத்தில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் சில நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • gggooooverrr

    அமெரிக்காவில் கவர்னர் பதவிக்கான போட்டிக் களத்தில் திருநங்கை - தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருநங்கை கவர்னர்

  • affffgaaaaa

    ஆப்கானிஸ்தானில் பள்ளியில் தற்கொலைப்படைத் தாக்குதல் - 48 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு

  • iiiiiiiiiiitaaalyyy

    இத்தாலியில் நெடுஞ்சாலைப் பாலம் இடிந்து விழுந்து விபத்து - 39 பேர் பலி

  • keeeraaalaaaa

    கேரளாவில் கனமழை - வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 70ஆக உயர்வு 14 மாவட்டங்களிலும் 'ரெட்' அலர்ட்

  • buildingggggg1234

    சுதந்திர தின விழா - நாடு முழுவதும் அரசு கட்டிடங்கள் மூவண்ண நிறங்களில் ஜொலித்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்