SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மேற்குவங்கத்தில் பிரதமர் உரையின்போது கொட்டகை சரிந்து விழுந்தது: காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி

550
16/07/2018

மிட்னாபூர்: மேற்குவங்க மாநிலம் மிட்னாபூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றிக் கொண்டிருந்த போது பொது மக்களுக்காக அமைக்கப்பட்டிருந்த கொட்டகை ஒன்று சரிந்து விழுந்தது. மழையில் நனையாமல் இருக்க அமைக்கப்பட்டிருந்த கொட்டகையில் மோடியை பார்க்கும் ஆர்வத்தில், அதிகப்படியாக தொண்டர்கள் ஏறி உள்ளனர். கூட்டத்தில் அவர் பேசிக் கொண்டிருந்த போது திடீரென தற்காலிக பந்தல் சரிந்து விழுந்தது. உடனடியாக பேச்சை பாதியில் நிறுத்தி விட்டு, தனது பாதுகாப்பாளரை அழைத்து அங்கு சென்று பார்க்கச் சொன்னார். பிரதமரின் பாதுகாவலர்கள், டாக்டர்கள் காயமடைந்தவர்களை மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் 22 பேர் வரை காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கூட்டத்திற்கு பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை மோடி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • china_cloning11

    செல்லப்பிராணிகளுக்கான குளோனிங் சேவை வழங்கும் சீன ஆய்வகம்!!

  • snow_river_falls11

    மார்கழி துவங்கியுள்ள நிலையில், சென்னையை வாட்டி வதைக்கும் பனிப்பொழிவு

  • christmas_planeealm1

    உலகின் பிரமாண்ட ஒளி கண்காட்சி : பன்முக வண்ண கிறிஸ்துமஸ் விளக்குகளால் ஜொலிக்கும் விமானம்

  • sutrula_12Icehotel1

    சுற்றுலா பயணிகளை குளிர்விக்கும் பனிக்கட்டி ஹோட்டல்.! : சுவிடனில் ருசிகரம்

  • mumbai_theevibathu11

    மும்பையிலுள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் தீ விபத்து :8 பேர் பலி; 141 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்