SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மத்திய தொல்லியல் துறைக்கு தனி அலுவலகம் திறப்பு விழா : பிரதமர் மோடி பங்கேற்பு

277
13/07/2018

புதுடெல்லி: இளைஞர்களுக்கு சுற்றுலா வழிகாட்டி பயிற்சி அளித்து புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்’’ என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். மத்திய தொல்லியல் துறைக்கு டெல்லியில் தனி அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். நமது நாட்டின் தொல்லியல் துறையின் பாரம்பரியத்தையும், புகழையும் பாதுகாக்க பொதுமக்கள் பங்களிப்பு அவசியம். நமது தொல்பொருள் மரபை பாதுகாக்க பெரு நிறுவனங்கள் முன்வர வேண்டும். அதில் பொதுமக்கள் சில மணி நேரமாவது தன்னார்வ தொண்டர்களாக பணியாற்ற வேண்டும். நமது நாட்டில் உள்ள வரலாற்று இடங்களில் 100 இடங்களையாவது பள்ளி பாடப்புத்தகத்தில் சேர்த்து, உள்ளூர் தொல்பொருள் தகவல்களையும் அதில் இணைத்து மாணவர்களை படிக்க வைத்தால் அவர்கள் அதை மிக எளிதாக கற்றுக்கொள்வார்கள். மேலும், அந்த தொல்லியல் துறை பகுதியில் உள்ள மக்களின் நலனையும் மேம்படுத்துவதன் மூலம் அந்த பகுதியில் சுற்றுலாவை வளர்ச்சி அடையச் செய்ய முடியும் என்றார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • SnakesDayatGuindy

    சென்னை கிண்டி பாம்புப்பண்ணையில் உலக பாம்புகள் தினம் கொண்டாடப்பட்டது

  • PMspeachshellfellwb

    மேற்குவங்கத்தில் பிரதமர் உரையின்போது கொட்டகை சரிந்து விழுந்தது: காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி

  • BastilleDaycelebration

    பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் கொண்டாட்டம்: 100 விமானங்களின் சாகச நிகழ்ச்சி

  • BodyPaintingFestival

    உடல் ஓவியத் திருவிழா 2018: வித்தியாசமான தோற்றத்தில் மாடல்கள்

  • 21stAnnualMudfestival

    தென்கொரியாவில் 21வது வருடாந்திர சேறு தின விழா கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்