SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொலம்பியாவில் 10 உயிர்களை பலிகொண்ட பாலம் இடிப்பு

2097
12/07/2018

கொலம்பியா: கொலம்பியாவில் கட்டுமானப் பணியின் போது விபத்தில் சிக்கி 10 உயிர்களை பலிகொண்ட பாலத்தை இடிக்கும் பணியின்போது 6 பேர் உயிரிழந்தனர். போகோட்டா என்ற இடத்தில் இரு மலைகளுக்கு நடுவே ஆயிரத்து 463 அடி நீளத்திற்கு பாலம் அமைக்கும் பணி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. சிராஜரா என்று பெயரிடப்பட்ட இந்தப் பாலம் கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருந்தபோது பாலத்தின் ஒரு பகுதி கடந்த ஜனவரி மாதம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து பாலப் பணிகள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில் பாலத்தை முழுவதும் இடிக்க கொலம்பிய அரசு முடிவு செய்தது. இதையடுத்து பாலத்தில் 200 கிலோ வெடிமருந்துகள் பொருத்தப்பட்டன. தொடர்ந்து வெடிமருந்துகள் மூலம் பாலம் தகர்க்கப்பட்டது. அப்போது அருகில் இருந்த கிரேனும் சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 3rdthiruvanamalai

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவம்: பூத வாகனத்தில் சந்திரசேகரர் பவனி

  • pudukottaikaja

    கஜா புயல் எதிரொலி : புதுக்கோட்டையில் பலத்த காற்று மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படங்கள்

  • NagaiGajaStorm

    நாகை மாவட்டத்தை கதிகலங்கவைத்த கஜா புயலின் ருத்ரதாண்டவம்: உருக்குலைந்து கிடக்கும் நகரம்!

  • kajarainhome

    புரட்டி போட்ட கஜா புயல் : மரங்கள், வீடுகள், மின் கம்பங்கள் சேதம்

  • sriramayanatrain

    புறப்பட்டது ஸ்ரீ ராமாயண எக்ஸ்பிரஸ் : புண்ணிய தலங்களில் 16 நாட்கள் சுற்றுலாப் பயணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்