SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

சென்னையில் இந்திய ராணுவத்தின் முதல் தலைமைத் தளபதி கே.எம்.கரியப்பாவின் சிலை திறப்பு!

707
23/06/2018

சென்னை : சென்னை ஆலந்தூரில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் இந்திய ராணுவத்தின் முதல் தலைமைத் தளபதி கே.எம்.கரியப்பாவின் சிலை திறக்கப்பட்டது. கர்நாடகத்தில் உள்ள மடிகேரியில் 1899ம் ஆண்டு பிறந்த கே.எம்.கரியப்பா, முதலாம் உலகப் போருக்குப் பிறகு பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் சேர்ந்தார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக ராணுவத்தில் பணியாற்றிய இவர், 1947ம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு எதிரான போரின்போது இந்திய படைக்கு தலைமை தாங்கினார். சுதந்திரத்திற்குப் பிறகு இந்திய ராணுவத்தின் முதல் தலைமைத் தளபதியாக கே.எம்.கரியப்பா நியமிக்கப்பட்டார். இந்திய ராணுவத்தில் ஐந்து நட்சத்திர ரேங்குடன் ஃபீல்டு மார்ஷல் அந்தஸ்து பெற்ற இரண்டு அதிகாரிகளில் கே.எம்.கரியப்பாவும் ஒருவராவார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • modi68bday

    வாரணாசியில் பள்ளி மாணவர்களுடன் தனது 68வது பிறந்தநாளை கொண்டாடிய பிரதமர் மோடி

  • losangeleswaterlight

    லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கொண்டாடப்பட்ட நீர் விளக்கு விழா: ஏராளமானோர் பங்கேற்பு

  • vinayagarsilai

    சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு

  • mankutstromchina

    தெற்கு சீனாவில் பேரழிவை ஏற்படுத்திய மங்குட் புயல் : தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிவாரண பணிகள்

  • tirupathififth

    திருப்பதியில் 5வது நாள் பிரமோற்சவம் கோலாகலம் : தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்