SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது: தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலை மறியல்

909
23/06/2018

சென்னை: நாமக்கல்லில் தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்று நாமக்கல் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல் பஸ் நிலையத்தில் இருந்து அவர் காரில் சென்றபோது, அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 293 பேர் கைது செய்யப்பட்டனர். இதனை கண்டித்து மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. இதனையடுத்து திமுக நிர்வாகிகள் மற்றும் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. மறியல் போராட்டத்தால் சேலம், மதுரை, திருச்சி, கும்பகோணம், புதுக்கோட்டை, காஞ்சிபுரம், நெல்லை உள்ளிட்ட இடங்களில் போராட்டம் நடைபெற்றது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • DryingClothingfestival

    சீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்

  • unmanedbookshopchina

    சீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு

  • newyork_steam_explosion

    நீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்!

  • Apollo11NeilArmstrong

    நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனின் மேற்பரப்பில் கால்பதித்த தினம் இன்று: அரிய புகைப்படங்களின் தொகுப்பு

  • smallrobochina

    சீனாவில் அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கு சென்று வழங்கும் சிறிய ரோபா வடிவமைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்