SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் - சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு

1329
20/06/2018

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், நான்கு நாள் சுற்றுப்பயணமாக சீனா வந்துள்ளார். பெய்ஜிங்கில் உள்ள கிரேட் ஹால் ஆப் தி பீப்பிள் அரங்கில் கிம் -ஜின்பிங் சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பில் இருநாட்டு உறவு குறித்தும், சமீபத்தில் கொரிய தீபகற்ப பகுதியில் நிலவிய பதற்ற நிலைக்குறித்து ஆலோசித்தாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்த வடகொரிய அதிபர் கிம், கொரிய தீபகற்பத்தில் தற்போதைய நிலைமை முன்பைவிட சீராக உள்ளது. எங்களது நல்லெண்ண முயற்சி, அமைதி மற்றும் நிலைத்தன்மை தொடர்பான நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா, வடகொரியா ஒத்துழைப்பு அளித்தால் அணு ஆயுத சோதனை விவகாரம் தீர்க்கப்படும் என்று கூறியிருக்கிறார். சீன பயணம் குறித்து வடகொரிய அதிபர் கிம், "இதுதான் என்னுடைய முதல் சீனப் பயணம். வட கொரியா-சீனா நட்புணர்வை மதித்து நடப்பது எனது வாழ்வின் உன்னத கடமைகளில் ஒன்றாகும் என்றார். 2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு வடகொரிய அதிபராக கிம் பதவி ஏற்ற பிறகு அவர் மேற்கொள்ளும் முதல் சர்வதேச பயணம் இதுவாகும்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • kajarainhome

    புரட்டி போட்ட கஜா புயல் : மரங்கள், வீடுகள், மின் கம்பங்கள் சேதம்

  • sriramayanatrain

    புறப்பட்டது ஸ்ரீ ராமாயண எக்ஸ்பிரஸ் : புண்ணிய தலங்களில் 16 நாட்கள் சுற்றுலாப் பயணம்

  • kajapuyal_roof111

    திருச்சியில் மரங்களை வேரோடு சாய்த்த கஜா புயல் : மின் கம்பங்கள், மேற்கூரைகளையும் சூறையாடியது

  • 16-11-2018

    16-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • gslvrocket

    ஜிசாட் 29 செயற்கைகோளை சுமந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி மார்க்3-டி2 ராக்கெட்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்