SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காஷ்மீரில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் கீர் பவானி திருவிழாவிற்கான முன்னேற்பாடுகள் தீவிரம்

404
19/06/2018

காஷ்மீரில் துல்முல்லா கிராமத்தில் கீர் பவானி ராகன்யா தேவி கோவிலில் ஆண்டுதோறும் கீர் பவானி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவில் காஷ்மீரிய பண்டிட்டுகள் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்களும் வந்து சிறப்பு வழிபாடு நடத்துவார்கள். இந்த திருவிழா இந்து-முஸ்லிம்களின் ஒற்றுமைக்கு ஒரு அடையாளமாகவே கருதப்பட்டு வருகிறது. திருவிழாவின்போது அப்பகுதியில் வசிக்கும் முஸ்லிம்கள், திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு பூஜைக்குத் தேவையான விளக்கு, எண்ணெய், பழங்கள், பூக்கள் ஆகியவற்றை அங்கு கொண்டுவந்து அளித்து திருவிழாவை சிறப்பாகக் கொண்டாட உதவி செய்வது மதநல்லிணக்கத்தின் முன்மாதிரியாகவே பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா ஜூன் கடைசி வாரத்தில் தொடங்கவுள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது. மேலும் பல்வேறு இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-07-2018

    15-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 14-07-2018

    14-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • TrumpLondonprotest

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் லண்டன் வருகை: குடியேற்ற கொள்கைகளுக்கு எதிராக மாபெரும் போராட்டம்

  • Michigancorpseflower

    18 ஆண்டுகளுக்கு பிறகு மிச்சிகனில் பூத்தது துர்நாற்றம் வீசும் பூ

  • Chinachemicalplantfire

    சீனாவில் இரசாயன ஆலையில் தீ விபத்து: 19 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்