SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிளாஸ்கோவின் உலக பிரசித்தி பெற்ற கலைப்பள்ளியில் பயங்கர தீ விபத்து : தீயில் கட்டிடம் எரிந்து நாசம்

660
18/06/2018

ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரத்தில் உலக பிரசித்தி பெற்ற ‘ஸ்கூல் ஆப் ஆர்ட்’ என்னும் கலைப்பள்ளி உள்ளது.‘ஸ்கூல் ஆப் ஆர்ட்’ என்னும் கலைப்பள்ளியில் மாகிந்தோஷ் கட்டிடத்தில் இரவு 11.15 மணிக்கு தீப்பிடித்தது. இந்த தீ அந்த கட்டிடம் முழுவதும் பரவியதுடன், அதையொட்டி அமைந்து உள்ள இரவு விடுதி வளாகம், இசை அரங்கத்துக்கும் பரவியது.இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் 120 தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். தீ வானளாவ கொழுந்து விட்டு எரிந்ததால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவே தீயணைப்பு படையினர் போராட வேண்டியது ஆயிற்று.ஏற்கனவே 2014–ம் ஆண்டு நடந்த தீ விபத்தில் மாகிந்தோஷ் கட்டிடம் பெரும் சேதம் அடைந்தது. பெரும் செலவில் அந்தக் கட்டிடத்தை சீரமைக்கும் பணி நடந்தது வந்தது. அடுத்த ஆண்டு இந்த கட்டிடத்தை திறக்க இருந்த நிலையில் மறுபடியும் அந்தக் கட்டிடம் தீ விபத்துக்கு உள்ளானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • kajarainhome

    புரட்டி போட்ட கஜா புயல் : மரங்கள், வீடுகள், மின் கம்பங்கள் சேதம்

  • sriramayanatrain

    புறப்பட்டது ஸ்ரீ ராமாயண எக்ஸ்பிரஸ் : புண்ணிய தலங்களில் 16 நாட்கள் சுற்றுலாப் பயணம்

  • kajapuyal_roof111

    திருச்சியில் மரங்களை வேரோடு சாய்த்த கஜா புயல் : மின் கம்பங்கள், மேற்கூரைகளையும் சூறையாடியது

  • 16-11-2018

    16-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • gslvrocket

    ஜிசாட் 29 செயற்கைகோளை சுமந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி மார்க்3-டி2 ராக்கெட்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்