SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மருத்துவமனையில் அனுமதி: மோடி, ராகுல் நேரில் நலம் விசாரிப்பு

617
12/06/2018

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மருத்துவ பரிசோதனைக்காக, எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். பிரதமர் மோடி நேரில் சென்று, அவரது குடும்பத்தினரிடம் நலம் விசாரித்தார்.பாஜ மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான வாஜ்பாய், வயோதிகம் காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். தற்போது 93 வயதை எட்டியுள்ள அவருக்கு அவ்வப்போது பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று உடல்நல பரிசோதனை செய்ய மருத்துவர்கள் தெரிவித்த ஆலோசனையின்படி எய்ம்சில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், பிரதமர் மோடி நேற்று மாலை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்று, வாஜ்பாய்க்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரங்களை டாக்டர்களிடம் கேட்டறிந்தார். இதைத்தொடர்ந்து வாஜ்பாய் குடும்பத்தினரிடமும் அவர் விசாரித்தார்.இதேபோல் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மருத்துவமனைக்கு சென்று வாஜ்பாய் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • kmkharippastatue

    சென்னையில் இந்திய ராணுவத்தின் முதல் தலைமைத் தளபதி கே.எம்.கரியப்பாவின் சிலை திறப்பு!

  • Stalinarrestvolunteersstirstir

    தி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது: தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலை மறியல்

  • president_kovindh_cuba123

    கியூபாவில் உள்ள பிடல் காஸ்ட்ரோ மற்றும் ஜோஸ் மார்டி நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மரியாதை!

  • RePlantingCanada

    அழிந்துவரும் காடுகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கனடா நாட்டு மக்கள்: வருவாயும் கிடைப்பதால் மகிழ்ச்சி

  • 23-06-2018

    23-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்