SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சோஜிலா சுரங்கப்பாதை திட்டப்பணி தொடக்கம் : பிரதமர் மோடி துவக்கி வைத்தார்

937
20/05/2018

லே: காஷ்மீர் மாநிலத்தில் ஆசியாவின் மிகவும் நீளமான சோஜிலா சுரங்கப்பாதை அமைப்பதற்கான திட்டத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். ஸ்ரீநகர் - கார்கில் - லே தேசிய நெடுஞ்சாலையில் 11,578 அடி உயரத்தில் சோஜிலா கணவாய் அமைந்துள்ளது. இந்த சுரங்கப்பாதை ஆசியாவிலேயே மிகவும் நீளமானது. இத்திட்டப் பணியை தொடங்கி வைப்பதற்காக ஒருநாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று காஷ்மீர் மாநிலத்துக்கு வந்தார். லேவில் நடந்த விழாவில், இந்த சுரங்கப்பாதை திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார். விழாவில், காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தியையும் கலந்து கொண்டார். கடந்த ஜனவரியில் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இத்திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஸ்ரீநகர்- லே இடையே இப்போது பயணம் செய்ய மூன்றரை மணி நேரமாகிறது. இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டால், இந்த பயண நேரம் 15 நிமிடங்களாக குறையும். மோடி தனது பயணத்தின்போது, 330 மெகாவாட் கிஷண்கங்கா நீர்மின் நிலையத்தை ஸ்ரீநகரில் நடந்த விழாவில் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • kmkharippastatue

    சென்னையில் இந்திய ராணுவத்தின் முதல் தலைமைத் தளபதி கே.எம்.கரியப்பாவின் சிலை திறப்பு!

  • Stalinarrestvolunteersstirstir

    தி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது: தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலை மறியல்

  • president_kovindh_cuba123

    கியூபாவில் உள்ள பிடல் காஸ்ட்ரோ மற்றும் ஜோஸ் மார்டி நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மரியாதை!

  • RePlantingCanada

    அழிந்துவரும் காடுகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கனடா நாட்டு மக்கள்: வருவாயும் கிடைப்பதால் மகிழ்ச்சி

  • 23-06-2018

    23-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்