SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஊட்டியில் கன மழை கொட்டியது : சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

2449
17/05/2018

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இடி, மின்னலுடன் தொடர்ந்து 2 மணி நேரம் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் ஊட்டி படகு இல்லத்தில் படகு சவாரி நிறுத்தப்பட்டது. மிதி படகுகள், மோட்டார் படகுகள், துடுப்பு படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டன. ஊட்டி சேரிங்கிராஸ், கமர்சியல் சாலை, எட்டின்ஸ் சாலை, தாவரவியல் பூங்கா சாலை, மெயின் பஜார், கூட்ஷெட் சாலை, ஹில்பங்க், பிங்கர்போஸ்ட், நொண்டிமேடு உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஆறு போல் ஓடியது. பலத்த மழையால் ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் மழைநீர் குளம்போல் தேங்கியது. அங்கு ஒரு சில கடைகளுக்குள் தண்ணீர் புகுந்தது. ஊட்டி நகரின் பிரதான கால்வாயான கோடப்பமந்து கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஊட்டி படகு இல்ல சாலையில் ரெயில்வே மேம்பாலத்தின் கீழ்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத வகையில் தண்ணீர் பெருகி கிடந்தது. பலத்த மழை காரணமாக சுற்றுலா தலங்களுக்கு வந்த சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்க முடியாமல் சிலர் திரும்பி சென்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • Netajimodi

    நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அருங்காட்சியகம் : பிரதமர் மோடி திறந்து வைத்தார்

  • VenezuelaProtestMaduro

    அதிபர் மதுரோ பதவி விலகக்கோரி வெனிசுலாவில் வலுப்பெற்றுள்ள போராட்டம்: வன்முறையில் இதுவரை 13 பேர் பலி

  • ChinaAIRestaurant

    முழுக்க முழுக்க ரோபோக்களால் செயல்படும் உணவகம்..: சீன தலைநகர் பெய்ஜிங்கில் திறப்பு

  • GreenLandIceLoss

    கிரீன்லாந்தில் நான்கு மடங்கு அதிகமாக உருகி வரும் பனிப்பாளங்கள்..: விஞ்ஞானிகள் கவலை!

  • BuShFiReTaSmAnIa

    ஆஸ்திரேலிய புதர்காடுகளில் பற்றி எரியும் காட்டுத் தீ...: 720 கி.மீ தூரத்திற்கு தீ பரவும் அபாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்