SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குடியாத்தம் கெங்கையம்மன் திருவிழா கோலாகலம் : பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த அம்மன் சிரசு

953
16/05/2018

குடியாத்தம்: வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் விழாக்களில் குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழாவும் பிரசித்தி பெற்றதாகும். ஆண்டுதோறும் வைகாசி மாதம் முதல் நாள் இந்த விழா நடந்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டு சிரசு விழா கடந்த 30ம்தேதி பால்கம்பம் நடப்பட்டு கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு 11ம் தேதி காப்பு கட்டுதல், பூங்கரகம் வீதியுலா, 12ம்தேதி அம்மன் திருக்கல்யாணம் நடந்தது. விழாவை முன்னிட்டு தினமும் திரளான பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து பொங்கல் வைத்தும், கூழ் வார்த்தும் நேர்த்திக்கடன் செலுத்தி வந்தனர். விழாவின் முக்கிய நிகழ்வான கெங்கையம்மன் சிரசு ஊர்வலம் நேற்று காலை நடந்தது. சிரசு ஊர்வலமாக புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக பக்தர்கள் வெள்ளத்தில் கெங்கையம்மன் கோயிலுக்கு வந்தது. அப்போது வழிநெடுகிலும் திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் தேங்காய் உடைத்து அம்மனை வணங்கினர். பின்னர் அம்மனுக்கு கண் திறக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டது. விழாவில் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகாவை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thaneerrr_kaari

    தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்