SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உறைய வைக்கும் மைனஸ் 30 டிகிரியில் சீன வீரர்கள் மேற்கொள்ளும் கடுமையான பயிற்சி : பதைபதைக்கச் செய்யும் புகைப்படங்கள்!!

519
29/06/2020

மைனஸ் 30 டிகிரி வெப்பநிலை நிலவும் பனிப் பிரதேசத்தில் மேலாடை இல்லாமல் சீன ராணுவத்தினர் கடினமாகப் பயிற்சி மேற்கொள்ளும் புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகியிருக்கிறது.சீனா - ரஷ்யா எல்லையில் உள்ள ஹைஹே ராணுவ தளத்தில் தற்போது குளிர்காலப் பயிற்சியை மேற்கொண்டிருக்கிறார்கள் சீன ராணுவத்தினர். சீன ராணுவத்தினர் கடினமான முறையில் ராணுவ பயிற்சி மேற்கொள்ளும் புகைப்படங்கள் தற்போது வைரலாகியிருக்கின்றன.குளிர்காலப் பயிற்சியையொட்டி, மேலாடை இல்லாமல் பனி மீது நின்றபடி சீன ராணுவத்தினர் பயிற்சி மேற்கொள்கிறார்கள். அந்தப் பயிற்சியின் போது பனியை அள்ளி உடலில் அப்படியே அப்பிக்கொள்கிறார்கள். எதிரே நிற்பவர்கள் கண்ணுக்குத் தெரியாத அளவுக்குப் பனி விழும் இடத்தில் நின்றுகொண்டு துப்பாக்கிச்சூடு நடத்துகிறார்கள். மைனஸ் 30 டிகிரி வெப்பநிலை நிலவும் பனி பிரதேசத்தில் மேலாடை எதுவும் இல்லாமல் உருண்டு, புரண்டு பயிற்சி மேற்கொள்வதைப் பார்த்தாலே பதைபதைக்கச் செய்கிறது. நெகட்டிவ் டிகிரி வெப்பநிலை நிலவுவதால் அவர்களின் விழிப் படலங்கள் உறைந்து போயிருப்பதையும் பார்க்க முடிகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 03-07-2020

    03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • petroLLL

    பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

  • pakisthN_11

    கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

  • mask_glovbeess1

    கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

  • 26-06-2020

    26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்