SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மகாராஷ்டிராவை நிலைகுலைய வைத்த நிசர்கா புயல்: ஆட்டம் கண்ட கப்பல்கள்; மின்னல் தாக்கி பற்றி எரிந்த மரம்!

904
04/06/2020

129 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூன் மாதத்தில் வெப்பமண்டல புயல் ஒன்று மகாராஷ்ட்ராவை தாக்கியுள்ளது. கனமழை மற்றும் சூறாவளியால் மகாராஷ்ட்ரா, குஜராத்தின் பல பகுதிகள் பாதிக்கப்பட்டன. மகாராஷ்டிராவில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அரபிக்கடலில் உருவான வெப்பமண்டல புயலான நிசர்கா, கரையை கடக்காமல் தொடர்ந்து அச்சுறுத்தி வந்தது. மகாராஷ்ட்ரா, குஜராத் இடையே ஜூன் 3ம் தேதி இந்த வெப்பமண்டல புயல் கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மும்பையில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் ராய்காட் மாவட்டம் அலிபாக்கில் பிற்பகலில் நிசர்கா வெப்பமண்டல புயல் கரையை கடந்தது. அப்போது மும்பையில் கடல் சீற்றம் காரணமாக கப்பல்கள் கடுமையாக ஆட்டம் கண்டன. குஜராத்தின் பாவ்நகரின் பாலிதானா பகுதியில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. அப்போது குடியிருப்பு பகுதியில் தாக்கிய மின்னல் ஒன்று அங்கிருந்த தென்னை மரம் மீது விழுந்ததால் மரம் பற்றி எரிந்தது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 03-07-2020

    03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • petroLLL

    பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

  • pakisthN_11

    கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

  • mask_glovbeess1

    கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

  • 26-06-2020

    26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்