SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தெற்கு அசாமில் தொடர் கனமழை காரணமாக நிலச்சரிவு: மண்ணில் புதைந்து 20 பேர் பரிதாப பலி!!!

459
03/06/2020

அசாமில் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் குறைந்தது 20 பேர் வரை உயிரிழந்துள்ளனர். தெற்கு அசாமின் பாரக் பள்ளத்தாக்கில் உள்ள மாவட்டங்களில் கனமழை காரணமாக நிலச்சரிவுகள் ஏற்பட்டது. காச்சார் மாவட்டத்தில் 7 பேரும், ஹைலாக்கண்டி மாவட்டத்தில் 7 பேரும், கரீம்கஞ்ச் மாவட்டத்தில் 6 பேரும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்ததாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதுதவிர இந்த மாவட்டங்களில் பலர் நிலச்சரிவால் படுகாயமடைந்துள்ளதாகவும், பலரை காணவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால் உயிரிழப்பு அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. கடந்த 2 நாட்களாக பாரக் பள்ளத்தாக்கில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நிலச்சரிவு குறித்து தகவல் அறிந்தவுடன், மீட்பு படையினர் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 03-07-2020

    03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • petroLLL

    பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

  • pakisthN_11

    கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

  • mask_glovbeess1

    கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

  • 26-06-2020

    26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்