SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலக அதிசயத்தின் தாஜ்மகாலை பார்வையிட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப்...தாஜ்மகாலின் தொன்மை மற்றும் சிறப்புகள் பற்றி எடுத்துரைப்பு

348
25/02/2020

ஆக்ரா விமான நிலையத்தில் டிரம்ப்பை உ.பி. முதல்வர் ஆதித்யநாத், ஆளுநர் ஆனந்திபென் படேல் ஆகியோர் வரவேற்றனர். பள்ளி மாணவ மாணவியர்கள் மயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டத்துடன் டிரம்ப் தம்பதியை வரவேற்றனர். பின்னர் ஆக்ரா விமான நிலையத்தில் இருந்து தாஜ்மகாலுக்கு டொனால்ட் டிரம்ப் புறப்பட்டனர். சுமார் 5 மணி அளவில் தாஜ்மகாலை அதிபர் ட்ரம்ப் சென்று அடைந்தார். மனைவி மெலனியா, மகள் இவாங்கா மற்றும் மருமகனுடன் தாஜ்மகாலை அமெரிக்க அதிபர் டிரம்ப் பார்வையிட்டார். தொல்லியல் துறையை சேர்ந்த தலைமை ஆய்வாளர், உலக அதிசயமான தாஜ்மகாலின் தொன்மை மற்றும் சிறப்புகள் குறித்து ட்ரம்ப் குடும்பத்தினரிடம் விளக்கினார். அத்துடன் தாஜ்மகாலுக்கு முன்பாக மனைவி மெலனியாவுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார் ட்ரம்ப், அமெரிக்க அதிபர் டிரம்ப் தாஜ்மகாலை பார்வையிடும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கவில்லை.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 30-05-2020

    30-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 29-05-2020

    29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 28-05-2020

    28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 26-05-2020

    26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-05-2020

    25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்