SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜெருசலேம் இஸ்ரேல் தலைநகராக தொடரும்.. மத்திய கிழக்கு அமைதி திட்டத்தை வெளியிட்ட டிரம்ப் : பாலஸ்தீனத்தில் வெடித்தது போராட்டம்

1311
30/01/2020

இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையிலான பிரச்சினைக்கு தீர்வுகாணும் விதமாக மத்திய கிழக்கு அமைதி திட்டம் என்ற ஒரு திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வெளியிட்டார். கிழக்கு ஜெருசலேமில் புதிய தலைநகருடன் கூடிய பாலஸ்தீன அரசு உருவாகும். ஆனால், ஜெருசலேம் பிரிக்கப்படாத தலைநகரமாக இஸ்ரேலுக்கு தொடர்ந்து இருக்கும் என்று அமெரிக்க டிரம்ப் தெரிவித்தார். இதன் மூலம் ஜெருசலேம் இஸ்ரேலுக்கே சொந்தம் என அமெரிக்கா கூறுகிறது.பாலஸ்தீன சுதந்திர அரசை முன்மொழிந்துள்ள டிரம்ப், மேற்கு கரை குடியேற்றங்கள் மீதான இஸ்ரேலின் இறையாண்மையையும் அங்கீகரித்துள்ளார். அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ அருகில் இருக்க இந்த அமைதி திட்டத்தை அறிவித்த டிரம்ப், “இதுதான் பாலத்தீனத்திற்கான கடைசி வாய்ப்பு” என்றும் கூறினார்.ஆனால் அமெரிக்காவின் அமைதி திட்டம் இஸ்ரேலுக்கு சாதகமானது என்றும், அது ஒரு சதித்திட்டம் என்றும் கூறி பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் நிராகரித்துள்ளார். மேலும் அமெரிக்காவின் அமைதி திட்டத்துக்கு எதிராக பாலஸ்தீனத்தில் போராட்டம் வெடித்துள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 30-05-2020

    30-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 29-05-2020

    29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 28-05-2020

    28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 26-05-2020

    26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-05-2020

    25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்