SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இலங்கையில் உலக சாதனை நிகழ்ச்சியாக அதிக இரட்டையர்கள் ஒன்று கூடிய மாபெரும் நிகழ்வின் மெய்சிலிர்ப்பூட்டும் படங்கள்

782
21/01/2020

இலங்கையில் அதிக இரட்டையர்கள் கூடி உலக சாதனை படைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. தலைநகர் கொழும்புவில் உள்ள வெளிப்புற விளையாட்டு மைதானத்தில் இதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்வில் ஏராளமான இரட்டையர்கள், மூவர்கள் பங்கேற்றதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.இதில் பங்கேற்றவர்களை எண்ணும் பணி நடந்து வருவதாகக் குறிப்பிட்ட அவர்கள், எண்ணிக்கையையும் அதற்கான ஆவணங்களையும் கின்னஸ் அமைப்பிடம் சமர்ப்பிக்க இருப்பதாகக் குறிப்பிட்டனர். ஆனால் இந்த முயற்சி வெற்றி பெற்றதா இல்லையா என்பது குறித்து கின்னஸ் நிறுவனம் பதிலளிக்கவில்லை.முன்னதாக தைவான் நாட்டில் கடந்த 1999ம் ஆண்டு நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் 3 ஆயிரத்து 961 ஜோடி இரட்டையர்கள், 37 ஜோடி மூவர்கள் மற்றும் 4 ஜோடி நால்வர்கள் பங்கேற்றது உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்