SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தி,மலை தீபத்திருவிழா 5ம் நாள் : வெள்ளி முஷிக வாகனத்தில் விநாயகர், ரிஷப வாகனத்தில் சந்திரசேகரர் பவனி

375
05/12/2019

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழாவின் 5ம் நாளான இன்று வெள்ளி முஷிக வாகனத்தில் விநாயகரும் ரிஷப வாகனத்தில் சந்திரசேகரரும் பவனி வந்தனர்.மூலவர் அண்ணாமலையாருக்கும், உண்ணாமுலையம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனர். தொடர்ந்து ராஜகோபுரம் எதிரில் அமைந்துள்ள அலங்கார மண்டபத்தில் இருந்து மேளதாளம் முழங்க காலை உற்சவம் தொடங்கியது. வெள்ளி முஷிக வாகனத்தில் விநாயகரும் ரிஷப வாகனத்தில் சந்திரசேகரரும் மங்கள வாத்தியங்கள் முழங்க மாடவீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • award20

    பஞ்சாபைச் சேர்ந்த சன்னி இந்துஸ்தானி இனிமையான குரல் ஆடிஷனில் இந்தியன் ஐடல் 11ஐ வென்றார்!!

  • 24-02-2020

    24-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-02-2020

    23-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • theepam2020

    மகாசிவராத்திரியை முன்னிட்டு தி.மலை கோவிலில் ஸ்ரீ லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம்

  • 22-02-2020

    22-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்