SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஈராக்கில் அரசை கண்டித்து நடைபெற்ற தொடர் தர்ணா போராட்டத்தில் கலவரம் வெடித்து 4 பேர் உயிரிழப்பு

333
08/11/2019

ஈராக்கில் அரசை கண்டித்து நடந்த தர்ணா போராட்டத்தில், கலவரம் வெடித்ததில் 4 பேர் உயிரிழந்தனர். ஊழல், வேலையின்மை, பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து ஈராக்கின் பல்வேறு நகரங்களில் மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக Umm Qasr துறைமுகத்தை வழிமறித்து டயர்களை எரித்தும், இறக்குமதி செய்யப்படும் உணவு பொருட்களை பிற இடங்களுக்கு எடுத்து செல்வதை தடுத்து நிறுத்தியும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் ஈராக்கில் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று பஸ்ரா நகரில் நடந்த தர்ணா போராட்டத்தை கலைக்க பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். கடந்த 1ம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டத்தில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் நேற்று நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-05-2020

    26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-05-2020

    25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-05-2020

    24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்