SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மம்மூத் யானைகளின் எலும்புகள் மற்றும் அதனை பிடிக்க மனிதர்கள் உருவாக்கிய 15,000 ஆண்டுகள் பழமையான பொறி: மெக்சிகோவில் கண்டுபிடிப்பு

1395
07/11/2019

பனி யுகத்தில் வாழ்ந்த மம்மூத் யானைகளின் எலும்புக்கூடுகள் மற்றும் அதனை பிடிக்க மனிதர்களால் உருவாக்கப்பட்ட 15,000 ஆண்டுகள் பழமையான பொறியை மெக்சிகோ ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மத்திய மெக்சிகோவில் உள்ள துல்டெபெக் என்ற பகுதியில் இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து பேசிய தொல்பொருள் ஆய்வாளர்கள், மம்மூத் யானைகளின் வரலாற்றில் இது ஒரு மிக்பெரிய கண்டுபிடிப்பு என்றும், 14 மம்மூத் யானைகளின் சுமார் 800 எலும்புகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளதாகவும் கூறியுள்ளனர். மேலும், மம்மூத் யானைகளை பிடிக்க மனிதர்களால் உருவாக்கப்பட்ட 2 பொறிகளை கண்டுபிடித்துள்ளதாகவும், 15,000 ஆண்டுகள் பழமையான அவை 1.7 மீட்டர் ஆழமும், 25 மீட்டர் விட்டம் கொண்டவையாக உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த எலும்புகள் அனைத்தும் மனிதர்கள் உருவாக்கிய குழிக்குள் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 03-07-2020

    03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • petroLLL

    பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

  • pakisthN_11

    கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

  • mask_glovbeess1

    கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

  • 26-06-2020

    26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்