SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நயாகரா நீர்வீழ்ச்சியில் நகரத் தொடங்கியுள்ள நூற்றாண்டு கப்பல்..: சில தினங்களில் அருவியில் இருந்து கீழே விழும் என தகவல்

1187
06/11/2019

அமெரிக்கா மற்றும் கனடா எல்லைகளில் பரந்து விரிந்துள்ள நயாகரா நீர்வீழ்ச்சி உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக உள்ளது. கடந்த 1918ம் ஆண்டு, நீர்வீழ்ச்சி அருகே கப்பல் பயணம் மேற்கொண்ட இருவர், கரையோரம் கப்பலை நங்கூரமிட்டு நிறுத்திவிட்டு ஓய்வெடுத்துள்ளனர். ஆனால் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், கப்பலுடன் இருவரும் அடித்து செல்லப்பட்டுள்ளனர். அவர்கள் அன்றைய தினமே பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், அவர்கள் சென்ற scow என்ற கப்பல் நீர்வீழ்ச்சியின் ஒரு ஓரம் சிக்கி கொண்டது. அதன் பிறகு அந்த கப்பல் 150 அடி ஆழத்தில் மூழ்கியது. பிரமாண்ட நீர்வீழ்ச்சியான நயாகராவின் நீரோட்டத்துக்கு அசைந்து கொடுக்காமல் கிட்டத்தட்ட 101 ஆண்டுகள் அந்த கப்பல் சிக்கியிருந்தது. இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பலத்த சூறாவளி காற்று வீசியதன் காரணமாக பாறைகளுக்கு இடையில் சிக்கியிருந்த கப்பல் நகர்ந்து, நீருக்கு வெளியே வந்தது. பின்னர் ஆற்றின் நீரோட்டத்தில் அடித்து வரப்பட்ட அந்த படகு தற்போது அந்த நீர்வீழ்ச்சிக்கு மிக அருகில் நீரால் அலைக்கழிக்கப்பட்டு வருகிறது. தற்போது அப்பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் படகு மேலும் இழுத்து செல்லப்பட்டு அருவியிலிருந்து கீழே தள்ளப்படும் என நயாகரா நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 08-12-2019

    08-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 07-12-2019

    07-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • RioStarFerrisWheel

    பார்வையாளர்களுக்காக விரைவில் திறக்கப்படவுள்ள ரியோ டி ஜெனிரோவின் பிரம்மாண்ட ராட்டினம்: வியப்பூட்டும் புகைப்படங்கள்

  • ambedh_day11

    இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம்: குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை!

  • SydneyOrangeSky19

    ஆஸ்திரேலிய வனப்பகுதியில் ஏற்பட்ட தீயின் புகையால் ஆரஞ்சு நிறமாக காட்சியளிக்கும் சிட்னி வான் பகுதி: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்