SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தங்கம், வைரம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள உலகின் விலை உயர்ந்த கழிவறை தொட்டி: ரூ.10 கோடி மதிப்புடையது!

712
06/11/2019

உலகிலேயே விலை உயர்ந்த கழிவறைத் தொட்டி என்ற சாதனை சீனாவில் படைக்கப்பட்டுள்ளது. இந்த கழிவறைத் தொட்டி முழுவதும் தங்கத்தால் செய்யப்பட்டது. மனிதர்கள் அமரும் பகுதியில் 335 கேரட் எடையிலான 40 ஆயிரம் வைரக்கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. வைரங்கள் பொதியப்பட்டுள்ள பகுதி புல்லட் புரூஃப் எனப்படும் துப்பாக்கித் தோட்டாவால் துளைக்கமுடியாத வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தங்கக் கழிவறை ஹாங்காங்கைச் சேர்ந்த ஆரோன் ஷம் என்ற நகைக்கடையில் தயாரிக்கப்பட்டு ஷாங்காய் நகரில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பிலான இந்தக் கழிவறையை விற்க மனமில்லை என்று கூறிய ஆரோன் ஷம் நிறுவன உரிமையாளர் இதனை அருங்காட்சியகத்தில் வைக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார். இந்தக் கழிவறைதான் உலகிலேயே விலை உயர்ந்தது என கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 08-12-2019

    08-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 07-12-2019

    07-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • RioStarFerrisWheel

    பார்வையாளர்களுக்காக விரைவில் திறக்கப்படவுள்ள ரியோ டி ஜெனிரோவின் பிரம்மாண்ட ராட்டினம்: வியப்பூட்டும் புகைப்படங்கள்

  • ambedh_day11

    இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம்: குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை!

  • SydneyOrangeSky19

    ஆஸ்திரேலிய வனப்பகுதியில் ஏற்பட்ட தீயின் புகையால் ஆரஞ்சு நிறமாக காட்சியளிக்கும் சிட்னி வான் பகுதி: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்