SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலகின் மிகப்பெரிய கால்நடை சந்தையான 'புஷ்கர் மேளா' தொடக்கம்..: அலங்கார பொருட்கள் கொண்டு ஒட்டகங்கள் அலங்கரிப்பு

539
06/11/2019

நம் ஊர் விவசாயிகளுக்காக நடக்கும் ஆட்டுச் சந்தை, மாட்டுச் சந்தை, குதிரைச் சந்தை போல் ராஜஸ்தான் விவசாயிகளுக்காக ஒட்டகச் சந்தை நடத்தப்படு வருகிறது. ராஜஸ்தான் மாநிலத்தின் பாலைவனப் பிரதேசத்தை ஒட்டியிருக்கும் புஷ்கர் நகரில், ஆண்டுதோறும் நடைபெறும் புஷ்கர் கால்நடை சந்தைக்கு, வடஇந்தியா முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான ஒட்டகங்கள் விற்பனைக்கு வருகின்றன. உலகப் பிரசித்திப்பெற்ற இந்த சந்தையானது, கடந்த 4ம் தேதியன்று தொடங்கிய நிலையில், வரும் 12ம் தேதி முடிவடையவுள்ளது. இந்த சந்தையில் பிரதானமாக ஒட்டகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இவை தவிர ஆடு, மாடு, எருது, குதிரைகள், பறவைகள் என அனைத்து விதமான வளர்ப்பு கால்நடைகளும் இங்கே விற்பனை செய்யப்படுவது வழக்கமாகும். இச்சந்தையில் கலந்துகொண்ட ஒட்டகங்களானது பல வர்ணங்களைக் கொண்ட ஆடைகள் மற்றும் அலங்கார பொருட்களைக் கொண்டு மிகவும் சிறப்பான முறையில் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 08-12-2019

    08-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 07-12-2019

    07-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • RioStarFerrisWheel

    பார்வையாளர்களுக்காக விரைவில் திறக்கப்படவுள்ள ரியோ டி ஜெனிரோவின் பிரம்மாண்ட ராட்டினம்: வியப்பூட்டும் புகைப்படங்கள்

  • ambedh_day11

    இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம்: குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை!

  • SydneyOrangeSky19

    ஆஸ்திரேலிய வனப்பகுதியில் ஏற்பட்ட தீயின் புகையால் ஆரஞ்சு நிறமாக காட்சியளிக்கும் சிட்னி வான் பகுதி: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்