SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டெல்லியில் ஒற்றைப்படை, இரட்டைப்படை எண்கள் அடிப்படையில் வாகன இயக்கம்: காற்று மாசுபாட்டை குறைக்க புதுயுக்தி

159
05/11/2019

நாட்டின் தலைநகர் டெல்லியில் காற்றில் மாசின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அண்டை மாநிலங்களில் உள்ள விளைநிலங்களில் கோதுமை அடித்தாள் எரிக்கப்படுவதாலும், வாகன புகையினாலும் காற்றின் தரம் குறைந்து வருகிறது. காற்று மாசை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இந்நிலையில், காற்று மாசுபாட்டை குறைக்கும் வகையில் டெல்லியில் ஒற்றைப்படை, இரட்டைப்படை எண்கள் அடிப்படையில் நவம்பர் 4-ம் தேதி முதல் வாகன இயக்கம் மீண்டும் அமலுக்கு வரும் என முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்திருந்தார். அதனடிப்படையில், நேற்று இந்த திட்டம் அமலுக்கு வந்துள்ளது. இந்த திட்டத்தின்படி நவம்பர் 4, 6, 8, 12 மற்றும் 14 ஆகிய நாட்களில் ஒற்றைப்படை பதிவெண்கள் (1, 3, 5, 7, 9 ஆகிய எண்களில் முடியும் எண்கள்) கொண்ட வாகனங்களை இயக்க அனுமதி கிடையாது. இதேபோல் நவம்பர் 5, 7, 9, 11 மற்றும் 15 ஆகிய நாட்களில் இரட்டைப்படை பதிவெண்கள் (0, 2, 4, 6, 8 ஆகிய எண்களில் முடியும் பதிவெண்கள்) கொண்ட வாகனங்களை இயக்க முடியாது. வரும் 15-ந் தேதி வரை இந்த திட்டம் நடைமுறையில் இருக்கும்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • PopeFrancisInThailand

    முதல் முறையாக தாய்லாந்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள போப் பிரான்சிஸ்: பாங்காக்கில் நடைபெற்ற கூட்டுப் பிரார்த்தனையில் உரை

  • 130eng_11

    இங்கிலாந்தில் 130 ஆண்டுகால ஆட்டோமொபைல் வரலாற்றை பறைசாற்றும் கண்காட்சி!!

  • plastic22

    பிரான்ஸில் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு அமைக்கப்பட்ட செயற்கை தீவு: சுற்றுச்சூழலை பாதுகாக்க புதிய முயற்சி

  • pink_kolkatta11

    இந்திய வரலாற்றில் முதல் முறையாக பகல் - இரவு டெஸ்ட் போட்டி : பிங்க் நிறத்தில் ஜொலிக்கும் கொல்கத்தா நகரம்

  • panta22

    சர்வதேச பாண்டா அமைப்பால் தத்தெடுக்கப்பட்ட பழுப்பு நிற பாண்டா: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்