SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி காமராஜ்நகர் தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம் : வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு

334
21/10/2019

தமிழகத்தில், விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரியிலும், புதுச்சேரியில் காமராஜ் நகர் தொகுதியிலும் நடைபெற்று வரும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக சார்பில் முத்தமிழ்ச்செல்வனும் திமுக சார்பில் புகழேந்தியும் போட்டியிடுகின்றனர். அந்தத் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள 275 வாக்குச்சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் 299 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. . அங்கு அதிமுக சார்பில் நாராயணனும், காங்கிரஸ் சார்பில் ரூபி மனோகரனும் போட்டியிடுகின்றனர். விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தொரவி கிராமத்தைச் சேர்ந்த 100 வயது முதியவரான வடிவேல் என்பவர், தனது வாக்கினைப் பதிவு செய்து ஜனநாயக கடமையாற்றினார். சக்கர நாற்காலியில் அழைத்து வரப்பட்ட அவர், தனது வாக்கினைப் பதிவு செய்தார்.புதுச்சேரி காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஜான்குமார், என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் புவனேஸ்வரன் உள்பட 9 பேர் போட்டியிடுகின்றனர்.21 இடங்களில் 32 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மழை பெய்து வரும் நிலையில், அதை பொருட்படுத்தாது மக்கள் வாக்களித்து வருகின்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-12-2019

    16-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-12-2019

    15-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 14-12-2019

    14-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • po13

    கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு வண்ணமயமான ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட போலந்து: ஜொலிக்கும் புகைப்படம்

  • wagle_hunttt

    கஜகஸ்தானில் பாரம்பரிய போட்டி : கழுகுடன் வேட்டைக்கு செல்லும் கசாக் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்