SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மெக்ஸிக்கோவில் ஜனநாயகத்திற்காக போராடிய மாணவர்கள் படுகொலையின் 51ம் ஆண்டு நினைவு தின பேரணியில் வன்முறை!

933
04/10/2019

மெக்ஸிக்கோவில், கடந்த 1968ம் ஆண்டு, அக்டோபர் 2ம் தேதி ஜனநாயக சீர்த்திருத்தத்தை வலியுறுத்தி பல்வேறு அமைப்புகளை சேர்ந்த மாணவர்கள் ஒன்று திரண்டு போராட்டங்களை நடத்தினர். அப்போது, ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நடைபெற இருந்த நிலையில், மாணவர்களின் தொடர் போராட்டத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், லாதேலோல்கோ சதுக்கம் அருகே சுமார் 100 பேர் ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த படுகொலையில் உயிரிழந்த மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் நேற்று மாணவர் படுகொலை நினைவு தினத்தை ஒட்டி பல்வேறு இடங்களில் திரண்ட மக்கள் பதாகைகளுடன் சோகாலோ சதுக்கம் நோக்கி பேரணி நடத்தினர். இந்தநிலையில், குறிப்பிட்ட சில தெருக்கள் வழியாக செல்ல காவல்துறையினர் தடை செய்யவே, ஆத்திரமடைந்த மக்கள் சாலையோரம் இருந்த பொதுச்சொத்துக்களை உடைத்து சேதப்படுத்தினர். இதனால், நினைவு தின பேரணியில் வன்முறை வெடித்தது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 03-07-2020

    03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • petroLLL

    பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

  • pakisthN_11

    கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

  • mask_glovbeess1

    கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

  • 26-06-2020

    26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்