SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அமெரிக்காவில் இரண்டாம் உலகப் போர் காலத்திய விமானம் விபத்து: 7 பேர் பலி, 9 பேர் படுகாயம் என தகவல்

944
04/10/2019

அமெரிக்காவின் கன்னெக்டிகட் மாகாணத்தில் இரண்டாம் உலகப் போர் காலத்திய பழமையான விமானம் விபத்தில் சிக்கியதில் 7 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 2ம் உலகப்போரில் ஜெர்மனி, ஜப்பானுக்கு எதிராக குண்டு மழை பொழிய, அமெரிக்க விமானப் படையால் அனுப்பப்பட்டது போயிங் B 17 ரக போர் விமானங்கள். அதில் 18 மட்டும் அமெரிக்காவில் தற்போதும் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், பழங்கால விமானங்களை வாங்கி இயக்கிவரும் காலிங்ஸ் அறக்கட்டளைக்குச் சொந்தமான B 17 விமானம், அந்நாட்டு நேரப்படி புதனன்று காலை 9.45 மணியளவில் 13 நபர்களுடன் புறப்பட்டது. 10 நிமிடங்களில் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட பைலட்டுகள், விமான எஞ்சினில் பிரச்சனை எனக் கூறி உடனடியாக ப்ராட்லி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்க அனுமதி கோரியதாக விமான நிலைய ஆணைய இயக்குனர் கெவின் தெரிவித்துள்ளார். ஆனால் தரையை தொட்டதும் கட்டுப்பாட்டை இழந்து வெடித்து தீப்பற்றி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 7 பேர் பலியானதாகவும், தரையில் இருந்த 3 பேர் உள்பட 9 பேர் காயமடைந்ததாகவும், அதில் மூவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Like Us on Facebook Dinkaran Daily News
  • watervapormoon

    வியாழன் கோளை சுற்றி வரும் யூரோபா நிலவில் நீராவி தடயங்கள் இருப்பதை உறுதி செய்துள்ளது நாசா!

  • kuwaitcamelRace

    குவைத்தில் ஒட்டகங்களுக்கான ஓட்டப்பந்தயம்: ரோபோ ஜாக்கி மூலம் ஒட்டகங்கள் போட்டியிட்டன ..புகைப்படங்கள்!

  • amazonTraders

    Amazon, Flipkart- க்கு எதிராக டெல்லியில் நேற்று போராட்டத்தில் குதித்த அகில இந்திய வணிகர்கள் சங்கம்!

  • dubaiairshow2019

    துபாயில் வெகு விமர்சையாக நடைபெற்ற விமான கண்காட்சி: கண்கவர் சாகசங்களை செய்து ஆச்சர்யத்தில் ஆழ்த்திய வீரர்கள்!

  • LAautoshow

    லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற ஆட்டோ ஷோ: பார்வையாளர்களை அரசவைத்த BMW, Mercedes கார்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்