SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

3,000 உயிர்களை பலி வாங்கிய 9/11 தீவிரவாத தாக்குதலின் நினைவு தினம் அனுசரிப்பு : அமெரிக்க அதிபர் டிரம்ப் மலரஞ்சலி

648
12/09/2019

அமெரிக்காவில் கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந்தேதி, அல்கொய்தா பயங்கரவாதிகள் விமானங்களை கடத்தி நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுர கட்டிடம் மற்றும் ராணுவ தலைமையகமான பென்டகன் மீது மோதி வெடிக்கச் செய்தனர்.உலகையே உலுக்கிய இந்த தாக்குதலில் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொன்று குவிக்கப்பட்டனர். .இந்த நிலையில் அமெரிக்காவின் இரட்டை கோபுரம் மற்றும் பென்டகன் தாக்கப்பட்டதின் 18-வது ஆண்டு நினைவுதினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.இதையொட்டி அமெரிக்காவில் உள்ள அனைத்து அரசு நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்டவற்றிலும் அமெரிக்க தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடும்படி ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டார்.மேலும் தாக்குதலில் பலியானவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள், தாக்குதல் நடத்த இடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். வாஷிங்டனில் உள்ள பெண்டகனில் நடைபெற்ற அனுசரிப்பு நிகழ்வில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பங்கேற்று மலரஞ்சலி செலுத்தினார்.இதுபோல, முன்னாள் அதிபர் புஷ்சும், பெண்டகன் நிகழ்வில் பங்கேற்று அஞ்சலி செலுத்தினார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-05-2020

    26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-05-2020

    25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-05-2020

    24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்