SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சீனாவின் பிடியிலிருந்து ஹாங்காங்கை விடுவியுங்கள்: அதிபர் டிரம்ப் தலையிட வலியுறுத்தி தூதரகம் முன்பு போராட்டக் குழுவினர் ஆர்ப்பாட்டம்

159
09/09/2019

ஹாங்காங்கில் குற்றம் செய்பவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி விசாரிக்கும் சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹாங்காங்கில் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக வார இறுதி நாட்களில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ரயில் நிலையம், விமான நிலையம், பல்கலைக் கழகம், தூதரகம் ஆகியவற்றின் முன், கருப்பு வெள்ளை முகமூடி, மஞ்சள் நிற ஆடை, குடை போராட்டம் உள்ளிட்ட பலவகை போராட்டங்களை முன்னின்று நடத்தி வருகின்றனர்.இதையடுத்து, மசோதாவை திரும்ப பெற்று கொள்வதாக ஹாங்காங் அரசு கடந்த வாரம் உறுதி அளித்தது.இந்நிலையில், கருப்பு சட்டையுடன் முகமூடி அணிந்து நேற்று அமெரிக்க தூதரகத்தை நோக்கி போராட்டக் குழுவினர் ஊர்வலம் சென்றனர். அப்போது, அமெரிக்க கொடிகளையும், `அதிபர் டிரம்ப், தயவுசெய்து ஹாங்காங்கை விடுவியுங்கள்’ என்ற பதாகைகளையும் ஏந்தியபடி கோஷமிட்டனர். ஹாங்காங் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் சட்டத்துக்கு ஆதரவளித்து அமெரிக்கா தீர்மானம் இயற்ற அவர்கள் வலியுறுத்தினர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • greexe_111

    கிரீ்ஸ் நாட்டின் தனாகரா விமானப்படைத் தளத்தில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சி : பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது

  • octo_111

    ஜெர்மனியில் களைகட்டியது அக்டோபர் ஃபெஸ்ட் : உலகின் அனைத்து வகையான பீர்களை ருசித்து மகிழும் பீர் திருவிழா

  • batman_tshirt11

    காமிக்ஸ் உலகின் நாயகன் பேட்மேன் வயது 80 : பேட்மேன் வேடம் அணிந்து ரசிகர்கள் உற்சாகம்; சிக்னல்கள், டி.சர்ட்டுகளில் பளிச்சிட்ட பேட்மேன்

  • circle_of_lightss1

    மாஸ்கோவில் ஒளிவட்டம் திருவிழா : மின்னும் விளக்கொளியில் மாயத் தோற்றங்களை கண்டு ரசித்த மக்கள்

  • climate_strike11

    பருவநிலை மாற்றத்திற்கு எதிராக இந்தியா உள்ளிட்ட 150 நாடுகளில் பேரணி : பூமியைப் பாதுகாக்க கோரி பதாகைகளை ஏந்தி இளைஞர்கள் முழக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்