SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஹிமாச்சல பிரதேசத்தில் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை...நிலச்சரிவால் மக்கள் அவதி

312
19/08/2019

ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் மண்டி, காங்ரா உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் அங்குள்ள பெரும்பாலான அணைகள் நிரம்பி வழிகின்றன. மேலும் பியாஸ் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மண்டியில் உள்ள தொங்கு பாலம் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. மழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. மேலும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 18 பேர் பலியாகியுள்ளனர். இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். குறிப்பாக தேசிய நெடுஞ்சாலைகளான குலு, மணாலி இடையே சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், தேசியப் பேரிடர் மீட்புப் படை, மாநிலப் பேரிடர் மீட்புப் படை, இந்தோ திபெத் எல்லைக் காவல் படை ஆகியவற்றைச் சேர்ந்த வீரர்கள் மீட்புப் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். குலு, கின்னார், மண்டி மாவட்டங்களில் பலத்த மழையால் சாலைகளில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இமாச்சலப் பிரதேசத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மலையோரங்கள், ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வட மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-05-2020

    26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-05-2020

    25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-05-2020

    24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்