SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கனடாவில் லட்சக்கணக்கானோர் கூடியிருந்த கொண்டாட்ட நிகழ்ச்சியில் திடீரென நடைபெற்ற துப்பாக்கிச்சூடு..: 4 பேர் காயம்!

768
19/06/2019

கனடாவில் சுமார் 10 லட்சம் பேர் கூடியிருந்த கொண்டாட்ட நிகழ்ச்சியில் திடீரென சிலர் துப்பாக்கியால் சுட்டதில் 4 பேர் காயமடைந்தனர். NBA சாம்பியன்ஷிப் கால்பந்தாட்டப் போட்டியில் டொரன்டோ ரேப்டர்ஸ் அணி வெற்றி பெற்றது. அந்த அணியைப் பாராட்டும் நிகழ்ச்சி டொரொன்டோவின் நாதன் ஃபிலிப்ஸ் சதுக்கத்தில் நடைபெற்றது. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். சதுக்கத்துக்கு வெளியே உள்ள சாலைகளில் சுமார் 10 லட்சம் பேர் ஒன்று கூடி தங்கள் நகரைச் சேர்ந்த அணி வெற்றி பெற்றதைக் கொண்டாடிக் களித்திருந்தனர். அப்போது திடீரென சிலர் துப்பாக்கியால் சுட்டதில் 4 பேர் காயமடைந்தனர். துப்பாக்கிச் சூட்டால் ஏற்பட்ட பதற்றம் காரணமாக கூட்டத்தினர் நாலாபுறமும் சிதறி ஓடினர். இதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய 3 பேரை மடக்கி பிடித்து கைது செய்தனர். இந்த பரபரப்பு காரணமாக பாராட்டு விழா இடையில் நிறுத்தப்பட்டு, நிலைமை சீரான பின்னர் மீண்டும் தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-11-2019

    22-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • watervapormoon

    வியாழன் கோளை சுற்றி வரும் யூரோபா நிலவில் நீராவி தடயங்கள் இருப்பதை உறுதி செய்துள்ளது நாசா!

  • kuwaitcamelRace

    குவைத்தில் ஒட்டகங்களுக்கான ஓட்டப்பந்தயம்: ரோபோ ஜாக்கி மூலம் ஒட்டகங்கள் போட்டியிட்டன ..புகைப்படங்கள்!

  • amazonTraders

    Amazon, Flipkart- க்கு எதிராக டெல்லியில் நேற்று போராட்டத்தில் குதித்த அகில இந்திய வணிகர்கள் சங்கம்!

  • dubaiairshow2019

    துபாயில் வெகு விமர்சையாக நடைபெற்ற விமான கண்காட்சி: கண்கவர் சாகசங்களை செய்து ஆச்சர்யத்தில் ஆழ்த்திய வீரர்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்