SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எட்டுத்திக்கும் வறட்சி!! : தண்ணீர் இல்லாமல் தள்ளாடும் இந்தியா ; குடங்களுடன் அலையும் மக்கள்

365
12/06/2019

இந்தியாவில் ஏறக்குறைய 40% நிலப்பகுதி வறட்சியால் பாதிக்கப்பட்டிருக்கிறது. மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் வழக்கத்தைக் காட்டிலும் மிகப் பெரிய தண்ணீர்ப் பஞ்சத்தைச் சந்தித்துள்ளன. தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா என்று தென்னிந்திய மாநிலங்களும் இதிலிருந்து தப்பவில்லை.மகாராஷ்டிரத்தின் சரிபாதிப் பகுதிகள் கடும் வறட்சிக்கு ஆளாகியிருக்கின்றன. இங்கே ஏறக்குறைய 28,000 கிராமங்கள் தண்ணீர்ப் பஞ்சத்தைச் சந்தித்திருக்கின்றன. குஜராத்தில் 16 மாவட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. ராஜஸ்தானில் 5,000-க்கும் மேற்பட்ட கிராமங்கள் தண்ணீர் இல்லாமல் தவிக்கின்றன. ஆந்திரத்தில் 11 மாவட்டங்களில் வறட்சி. கர்நாடகத்தில் உள்ள 176 வட்டங்களில் 156 வட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டவையாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன.தமிழ்நாட்டின் தலைநகரான சென்னைக்குக் குடிநீர் ஆதாரங்களாக விளங்கும் நான்கு பெரிய ஏரிகளுமே வறண்டுவிட்டன. சென்னையின் பல பகுதிகளில் குழாய் வழியாகத் தண்ணீர் விநியோகம் செய்வது நிறுத்தப்பட்டுவிட்டது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-08-2019

    18-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 17-08-2019

    17-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • flower16

    பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் டவுன் ஹாலில் நடைபெற்ற ஃப்ளவர் டைம் கண்காட்சி: புகைப்படங்கள்

  • tightropewalker

    நதியின் மேல் 115 அடி உயரத்தில் கட்டப்பட்ட கயிற்றின் மீது நடந்து அசத்திய கலைஞர்: பார்வையாளர்கள் வியப்பு!

  • 16-08-2019

    16-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்