SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஹங்கேரியில் டன்யூப் ஆற்றுக்குள் மூழ்கிய படகு 2 வாரங்களுக்கு பிறகு மீட்பு : இதுவரை 28 பேர் உயிரிழப்பு

274
12/06/2019

ஹங்கேரியின் தலைநகர் புடாபெஸ்ட் டன்யூப் ஆற்றில் விபத்துக்குள்ளான படகு நீர்பரப்புக்கு மேல் கொண்டுவரப்பட்டபோது படகின் உள்ளே இருந்து மேலும் நான்கு பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.அந்த நான்கு சடலங்களில் ஒன்று ஹங்கேரியைச் சேர்ந்த படகின் கப்டனுடையது என்றும் மற்றைய மூன்று சடலங்களும் தென்கொரிய சுற்றுலாப் பயணிகளினுடையதாக இருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.கடந்த மாதம் 29ம் திகதி இரவு 9 மணியளவில் தென்கொரியாவைச் சேர்ந்த பயணிகள் டன்யூப் ஆற்றில் படகில் சுற்றுலாப்பயணம் மேற்கொண்டபோது அவர்கள் பயணம் செய்த படகு மற்றொரு படகுடன் மோதியதில் விபத்துக்குள்ளாகி நீரில் மூழ்கியது.படகு விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 35 பேரில் ஏழு பேர் மீட்கப்பட்டனர். உயிரிழந்த பலரின் உடல்களும் மீட்கப்பட்டிருந்தன. எனினும் பலர் காணாமல் போயிருந்தனர்.ஆறு பெருக்கெடுத்து நீர் நிறைந்திருந்த காரணத்தால் தேடுதல் நடவடிக்கைகள் தடைப்பட்டிருந்தன. இந்த படகு விபத்தில் இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 11-12-2019

    11-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • jnu_studentss1

    குடியரசுத்தலைவர் மாளிகையை நோக்கி பேரணி சென்ற ஜேஎன்யு பல்கலை. மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தடியடி நடத்திய போலீஸார்

  • bushfire_aussiee1

    ஆஸ்திரேலியாவில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் புதர் தீ : புகை மண்டலமாக காட்சியளிக்கும் சிட்னி நகரம்

  • asutra_bushfirr1

    ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் சிக்கி சுமார் 2000த்திற்கும் மேற்பட்ட கோலா விலங்குகள் உயிரிழப்பு

  • parani_deepam11

    கார்த்திகை தீபத் திருவிழா : தி.மலை அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்