SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காஷ்மீரில் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு எதிரான போராட்டங்கள், வன்முறையாக மாறியதில் 70 பேர் படுகாயம்

287
14/05/2019

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திப்போராவில் உள்ள சம்பல் என்ற கிராமத்தில் 3 வயது சிறுமிக்கு சாக்லேட்களை கொடுத்து, தனியாக அழைத்து சென்று, அருகில் உள்ள பள்ளியில் வைத்து 20 வயது இளைஞர் அவரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளார். சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து காவல்துறையிடம் புகார் அளித்ததை தொடர்ந்து, போலீசார் அதே கிராமத்தை சேர்ந்த இளைஞரை கைது செய்தனர். இந்நிலையில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றது. ஸ்ரீ நகர் - முசாஃபர்பாத் நெடுஞ்சாலையில் போக்குவரத்து முடங்கியது. இதனைத் தொடர்ந்து போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் ஏற்பட்ட மோதலில் பொதுமக்களின் வாகனங்கள் சேதமடைந்தன. 70 பேர் காயமடைந்தனர், தெற்கு காஷ்மீரில் பல்வேறு பகுதிகளிலும் வன்முறை வெடித்தது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 03-07-2020

    03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • petroLLL

    பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

  • pakisthN_11

    கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

  • mask_glovbeess1

    கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

  • 26-06-2020

    26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்