SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்தியாவின் நிர்பய் ஏவுகணை சோதனை வெற்றி

1240
16/04/2019

ஆயிரம் கிலோமீட்டர் தூரம் வரை பாய்ந்து சென்று இலக்கை தாக்கும் நிர்பய் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் பெங்களூரை சேர்ந்த ஏடிஇ ஆய்வகம் நிர்பய் ஏவுகணையை தயாரித்துள்ளது. நீண்ட தூர ஏவுகணையான நிர்பய், எல்லா பருவநிலைகளில் பயன்படுத்தவும் மற்றும் பல்வேறு தளங்களில் இருந்து ஏவுவதற்கும் ஏற்றது. 6 மீட்டர் நீளமும், அரை மீட்டர் அகலமும் கொண்ட இந்த ஏவுகணையின் இறக்கைகள் 2.7 மீட்டர் அகலம் கொண்டவை. ஆயிரத்து 500 கிலோ எடை கொண்ட இந்த ஏவுகணை, அணு ஆயுதங்கள் உள்ளிட்ட 24 வகையான ஆயுதங்களை சுமந்து செல்ல வல்லது. மேலும் தரையிலிருந்து 100 மீட்டர் முதல் 4 கிலோமீட்டர் வரை வெவ்வேறு உயரங்களில் பறந்துசெல்லும் திறன்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிர்பய் ஏவுகணை ஒடிசா கடலோரத்தில் நேற்று வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 29-02-2020

    29-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • DelhiBackToNormal282

    வன்முறை ஓய்ந்த நிலையில் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பும் வடகிழக்கு டெல்லி: புகைப்படங்கள்

  • president20

    எகிப்தில் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் காலமானார்: இராணுவ இறுதி சடங்கு செலுத்தி ஆதரவாளர்கள் அஞ்சலி

  • saudipudhuvellai11

    ‘புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது’.. சவூதி அரேபியா பாலைவனங்களில் அரிதான பனிப்பொழிவு

  • vaanvali20

    சிரியா வான்வெளி தாக்குதலில் துருக்கி ராணுவ வீரர்கள் 33 பேர் பரிதாப உயிரிழப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்